தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- பிரிட்டன்.

சமுதாய சொந்தங்களே....!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...சமுதாய சொந்தங்களே! ஏழு கடல் கடந்தாலும் சமுதாயக்கடமையை மறக்க மாட்டோம் என, தாயகத்தில் நமது வாழுவுரிமை பெற உழைக்கும் த மு மு காவிற்கு புதிய கரம் கொடுக்க வந்திருக்கும்...த மு மு க-பிரிட்டன் கிளையை பிரிட்டனில் வசிக்கும் சொந்தங்களுக்கு அறிமுகம் செய்தீர்களா..?....www.tmmkuk.blogspot.com

Wednesday, 24 June 2009

இலண்டன்:பேராசியரின் உரையும் கருத்து பகிர்வும்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்க்கழகத்தலைவர் பேராசிரியர் Dr,MH.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இலண்டன் குரைடன் மஸ்ஜித்தில் 16/06/09 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் என்னும் தலைப்பில் தமிழில் பேருரை நிகழ்த்தினார்கள்.

அதில், இறைமறை,நபி மொழிகளிலிருந்து இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் எவ்வளவு மதிப்புடைய ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, இன்று நாம் காணும் காட்சிகள் கவலை தரும் நிலையி உள்ளதாக தனது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

நல்ல தலைமுறை அமைய வேண்டுமானால் குழந்தைகளின் உரிமை காக்கப்படவேண்டும் என்றார்.

உரையை கேட்பதற்கு பெண்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

உரைக்கு பின் பள்ளியின் கீழ் தளத்தில் த மு மு கவை பிரிட்டனில் கட்டமைக்கபடவேண்டியதன் அவசியத்தை தலைவர் பேராசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.


இன்ஷா அல்லாஹ் தொடரும்....


Template by - Abdul Munir | Daya Earth Blogger Template