தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- பிரிட்டன்.

சமுதாய சொந்தங்களே....!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...சமுதாய சொந்தங்களே! ஏழு கடல் கடந்தாலும் சமுதாயக்கடமையை மறக்க மாட்டோம் என, தாயகத்தில் நமது வாழுவுரிமை பெற உழைக்கும் த மு மு காவிற்கு புதிய கரம் கொடுக்க வந்திருக்கும்...த மு மு க-பிரிட்டன் கிளையை பிரிட்டனில் வசிக்கும் சொந்தங்களுக்கு அறிமுகம் செய்தீர்களா..?....www.tmmkuk.blogspot.com

Wednesday, 11 November 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

Wednesday, 24 June 2009

இலண்டன்:பேராசியரின் உரையும் கருத்து பகிர்வும்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்க்கழகத்தலைவர் பேராசிரியர் Dr,MH.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இலண்டன் குரைடன் மஸ்ஜித்தில் 16/06/09 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் என்னும் தலைப்பில் தமிழில் பேருரை நிகழ்த்தினார்கள்.

அதில், இறைமறை,நபி மொழிகளிலிருந்து இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் எவ்வளவு மதிப்புடைய ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, இன்று நாம் காணும் காட்சிகள் கவலை தரும் நிலையி உள்ளதாக தனது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

நல்ல தலைமுறை அமைய வேண்டுமானால் குழந்தைகளின் உரிமை காக்கப்படவேண்டும் என்றார்.

உரையை கேட்பதற்கு பெண்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

உரைக்கு பின் பள்ளியின் கீழ் தளத்தில் த மு மு கவை பிரிட்டனில் கட்டமைக்கபடவேண்டியதன் அவசியத்தை தலைவர் பேராசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.


இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Wednesday, 17 June 2009

தமுமுக வரலாற்றில் இலண்டன் பள்ளிவாசல்!

சவுத் இலண்டனில் அமைந்துள்ள குரைடன் மஸ்ஜித் மற்றும் இஸ்லாமிய மையம், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக வரலாற்றோடு இணைந்துவிட்டது!
ஆமாம்!


குரைடன் பள்ளியோடு தொடர்புடைய தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆயிரத்தை தொட்டுநிற்பர்! ஆனால், பள்ளியின் வரலாற்றில் இதுவரை தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகக்கூட்டம் நடைபெற்றதில்லை.
அதற்கு அவர்களும் முயற்சித்ததுமில்லை.


ஆனால்,த மு மு கத்தலைவர்Dr,Pro., MH.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பிரிட்டன் பயணத்தை அறிந்த குரைடன் பகுதி தமுமுகவினர் தலைவரிடம் அனுமதிப்பெற்று பள்ளிவாசல் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது தமிழகத்திருந்தா...? தேதிப்பார்த்து சொல்கிறோம் எனக்கூறினர்.


ஆனால், அவர்களின் மழுப்பலை புறிந்துக்கொண்ட கழகத்தினர் தலைவரின் - தமுமுகவின் போராட்ட ,சாதனை வரலாறுகளை கடிதமாகவே கொடுத்தனர்!

அவ்வளவுதான் தலைகீழ் மாற்றம்!

இப்படியொரு முஸ்லிகளின் சாதனை மிக்க இயக்கமா...?பாபரி பள்ளி வாசல் தொடங்கி முஸ்லிகளின் வாழ்ழுரிமை போராட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளி வாசல்கள் மீட்பு, முஸ்லிம்களின் அன்றாட பிரச்சினைகள்....ஆம்லான்ஸ் சேவை, சுனாமி...அதன் தலைவரும் இந்திய முஸ்லிம்களின் சார்பில் அய்.நா மாமன்றம் வரைச்சென்று பேருரை நிகழ்த்தியுள்ளார்...இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்துவதற்கு தொடர் முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் இந்திய முஸ்லிம்களின் வலிமை மிக்க தலைவராக திகழ்கிறார்....பள்ளியில் உரை நிகழ்த்த எத்தனை நாட்கள் வேண்டும் என்றனர்.தேதி உள்ளதா இல்லையா என பார்த்து சொல்வதாக சொன்ன பள்ளி நிர்வாகிகள்!( புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!)தலைவரிடம் அனுமதிப்பெற்று ஜூன் 15 ஆங்கில உரையும் 16 தமிழ் உரையும் அஸர் தொழுகைக்கு பின் என நிர்வாகத்திடம் தகவல் சொல்லப்பட்டது!


தமுமுக வரலாற்றில் இலண்டன் பள்ளிவாசல்! தொடரும்....

Tuesday, 16 June 2009

இலண்டன்:இயக்கங்களும் ஊடங்களும் தலைவர் பேராசிரியரை நோக்கி...!


  • BBC interview ( with BBC manivannan)
______________________________________________________________
  • With Director General of Islamic Foundation Dr Manazir Ahsan
____________________________________________________________________
  • Islamia dawah conference, East London.

த மு மு கத்தலைவர் பேராசிரியர்,Dr., MH. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பிரிட்டன்

சுற்றுப்பயணக்குறிப்புகள் புகைப்படங்கள் தொடரும்....

இன்ஷாஅல்லாஹ் !

Sunday, 14 June 2009

இலண்டன் மாநாட்டில் தமுமுக, ஜாக் தலைவர்கள்!

இலண்டன் ஜூன் 14


இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!
எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.

மநாட்டில் தமிழ்நாடு JAQH அமைப்பின் அமீர் மெளலவி S. கமாலுதீன் மதனி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு

உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை,

இஸ்லாமிய வட்டியில்ல கடன்,

படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள்.

பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

Saturday, 13 June 2009

இலங்கை தமிழ் முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதர்களின் மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்

லண்டன் வருகைதந்துள்ள தமுமுக தலைவர் Dr, M.H. ஜவாகிருல்லா அவர்களிடம் இலங்கை தமிழ் முஸ்லிம் மற்றும் மாற்றுமத சகோதர்களின் மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடல் லண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையத்தில் நடைப்பெற்றது.


இலண்டன்: த மு மு க தலைவரின் வரலாற்று சிறப்பு மிக்க பேருரை...!


Template by - Abdul Munir | Daya Earth Blogger Template