தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- பிரிட்டன்.

சமுதாய சொந்தங்களே....!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...சமுதாய சொந்தங்களே! ஏழு கடல் கடந்தாலும் சமுதாயக்கடமையை மறக்க மாட்டோம் என, தாயகத்தில் நமது வாழுவுரிமை பெற உழைக்கும் த மு மு காவிற்கு புதிய கரம் கொடுக்க வந்திருக்கும்...த மு மு க-பிரிட்டன் கிளையை பிரிட்டனில் வசிக்கும் சொந்தங்களுக்கு அறிமுகம் செய்தீர்களா..?....www.tmmkuk.blogspot.com

Friday, 12 June 2009

லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை துவக்கம்

தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.




Template by - Abdul Munir | Daya Earth Blogger Template